ஒரு நாள் நான் இரவானால் ,என்னென்ன செய்வேன் என்பது பற்றிய கவிதை
ஒரு நாள் நான் இரவானால் ,
வானத்து மேசையில்
என்னால் சிதறடிக்கப்பட்ட
விண்மீன்கள்
வாரி
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றிற்கும்
விதவிதமாய் பெயர்சூட்டுவேன்!
ஒரு நாள் நான் இரவானால்,
என்னுடைய திலகமான
எப்போதும் தேயாத
முழுநிலவாய் வைத்திருந்து,
தினம்தினம்
திகட்டாமல் கண்டிருப்பேன்!
ஒரு நாள் நான் இரவானால்,
என்னுடைய வானத்தில்
என்றுமில்லா வண்ணனாய்
என்
வான்மீன்களை அம்பாய் எய்து
வானவில்லை
வாட்டமில்லாமல் பிரகாசமாய்!
ஒரு நாள் நான் இரவானால்,
பலர் பலரிடம் கொண்ட
தனிமைச் சுவர்களைத்
தகர்த்தெரிந்து ,
சொற்களாய்
ஒரு நாள் நான் இரவானால்,
இடிந்த
செங்கல் ஒவ்வொன்றையும்
எடுத்து எடுத்து வந்து,
மற்றொருவர்
பக்குவமாய் சுவர் சமைப்பேன்!
ஒரு நாள் நான் இரவானால்,
பிரபஞ்சத்தில் கூடிய
அனைவரின் அமைதி அலைகளில்,
ஆழ்ந்த ஞானங்களை
ஒரு நாள் நான் இரவானால்,
என்னுடைய கருமையில்,
எல்லா வர்ணங்களையும் குழைத்து
கோலமிட்டுக்
ஒரு நாள் நான் இரவானால்,
கோலக் குயில்கள்
பகலிடம்
இரவல் வாங்கி,
நீண்டிடச்
ஒரு நாள் நான் இரவானால்,
துயிலும் என் பிள்ளைகளுக்காய்
தாலாட்டை
ஒரு நாள் நான் இரவானால்,
எனக்கு உடல் இருந்தால்
யாருமில்லா சாலைகளிலே,
ஏதுமில்லா கானங்களிலே
எங்கும் அந்தரத்தில்
கயிறுகள் பலகட்டி,
ஊஞ்சலாடி உயிர்த்திருப்பேன்!
ஒரு நாள் நான் இரவானால்,
நாள்தோறும்
நாளை ஒரு விடியல்
நம்மிடம் உண்டு,
காலை அவ்விடியல்
உனக்கானதே எனக்கொண்டு,
இன்று நீ உறங்குவாய் நன்று,
உனக்கு எந்நாளும் திருநாளே என்று!!
நான் இரவானால் ....